கிருஷ்ணகிரியில் பாட புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, மற்றும் சீருடை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

