கூடலழகர் பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
108 வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா இன்று ஜூன் 2ந் தேதி தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் அன்று இரவு பெருமாள் அன்னை வாகனத்தில் எழுந்தருள்கிறார். அதனை தொடர்ந்து ஜூன் 3ந் தேதி 2ம் நாள் திருவிழாவில் சிம்ம வாகனத்திலும் ஜூன் 4ந் தேதி 3ம் நாள் திருவிழாவில் அனுமான் வாகனத்திலும் ஜூன் 5ந் தேதி 4ம் நாள் திருவிழாவில் கருட வாகனத்திலும் ஜூன் 6ந் தேதி 5ம் நாள் திருவிழாவில் சேஷ வாகனத்திலும் ஜூன் 7ந் தேதி 6ம் நாள் திருவிழாவில் யானை வாகனத்திலும் ஜூன் 8ந் தேதி 7ம் நாள் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு உற்சவம் மற்றும் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 9ந் தேதி 8ம் நாள் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதனை தொடர்ந்து ஜூன் 10ந் தேதி 9ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 11ந் தேதி 10ம் நாள் திருவிழாவில் சப்தவர்ண சப்பரத்திலும் அதனைத் தொடர்ந்து ஜூன் 12ந் தேதி 11ம் நாள் திருவிழாவில் காலை தீர்த்தவாரி உற்சவம் முடிந்து கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜூன் 13-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார். ஜூன் 14-ந் தேதி உற்சவ சாந்தி பூஜை மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
Next Story





