நாகராஜா கோவிலில் மஞ்சள் பொங்கல்

நாகராஜா கோவிலில் மஞ்சள் பொங்கல்
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ் டி மங்காடு பகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 81வது ஆண்டு ஆயில்ய திருவிழா கடந்த 26 ஆம் தேதி துவங்கியது.        விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை காலை 9 மணி அளவில் பண்டார அடுப்பில் தேவஸ்தான தந்திரி வினு கிருஷ்ணன் தீ மூட்ட பெண்கள் மஞ்சள் பொங்கல் வழிபாடு நடத்தி நாகராஜாவை வணங்கினர். விழாவில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தி சென்றனர்.
Next Story