தடா கோவில் பிரிவு அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.வாலிபர் படுகாயம் .

தடா கோவில் பிரிவு அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.வாலிபர் படுகாயம் .
தடா கோவில் பிரிவு அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.வாலிபர் படுகாயம் . கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி ,கலைவாணர் தெருவை சேர்ந்தவர் காமராஜ் வயது 40. இவர் மே 31 ஆம் தேதி இரவு 10 20 மணியளவில் கரூர் திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட தடா கோவில் பிரிவு அருகே சென்ற போது, எதிர் திசையில் கர்நாடக மாநிலம் , பெங்களூர் , திருப்பாலையா பகுதியைச் சேர்ந்தவர் சாரதி வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ,காமராஜ் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காமராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காமராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் ,அஜாகிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சாரதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story