அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி அன்பழகன் MLA தலைமையில், இன்று மாலை பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Next Story





