கரூரில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது.காவல்துறை நடவடிக்கை.

கரூரில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது.காவல்துறை நடவடிக்கை.
கரூரில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது.காவல்துறை நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், உதயகுமார் , பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆர்த்தி ஆகியோர் ஜூன் ஒன்றாம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் வாங்கல் குப்பிச்சிபாளையம் வாட்டர் டேங்க் அருகே சட்ட விரோத புகையிலை விற்பனையில் ஈடுபட்ட வாங்கல் கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த மணி என்பவரும், ராயனூர் பகவதி அம்மன் கோவில் அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனையில் ஈடுபட்ட கல்யாணசுந்தரம் இது 64 என்பவரையும், இதே போல வாங்க பாளையம் செக்போஸ்ட் அருகே சட்டவிரோத புகையிலை விற்பனையில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் வயது 35 ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் ,அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் , கூல்லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story