கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்கள் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை சிறப்பு தாசில்தார் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஆந்திர மாநிலம் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகோவில் வட்டார போக்குவரத்து அலவலக சோதனை சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அங்கு நின்ற டாரஸ் லாரியில் சோதனையிட்ட போது அதில் பெரிய கிரானைட் கல் ஒன்று அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

