சுருளி ஆறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம்

தேனி மாவட்டதில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேகமலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி உள்ளன. அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் நேற்று (ஜூன் 01) முதல் சுருளியாறு மின் நிலையத்தில் அதிகபட்ச அளவான 35 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
Next Story

