ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விலை இல்லா நோட்டு புத்தகம் வழங்கிய எம் எல் ஏ.

ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விலை இல்லா நோட்டு புத்தகம் வழங்கிய எம் எல் ஏ.
X
ஆண்டிமடம் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விலையில்லா நோட்டு புத்தகம் பள்ளிச் சீருடையை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
அரியலூர், ஜூன்.2- சென்னை,திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்,சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிடம் ஒன்றியம்,விளந்தை மேற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்,சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) J.சங்கர்,வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன் சுதன்குமார்,பரிமளம்,தலைமை ஆசிரியர் விஜயா,ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க.முருகன் மற்றும் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story