அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு
X
குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி திறப்பையொட்டி, பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகளுக்கு ராஜா, ராணி போன்று கிரீடம் அணிவித்து இனிப்புகள் வழங்கி, தலைமையாசிரியை கவுசல்யாமணி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலர் அருள், பி.டி.ஏ. தலைவர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கந்தசாமி, பள்ளி மேலாண்மை குழு பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியை பாரதி தலைமையில், மாணவ, மாணவியருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
Next Story