ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
X
ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
ராசிபுரம் பேருந்து நிலையம் இடம் மாற்றத்தை கைவிடக் கோரி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசு வலியுறுத்தி ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் ராசிபுரம் பேருந்து நிலையம் இடம் மாற்றத்தை கைவிடக் கோரி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசின் வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் அசோக் கண்ணன் தலைமை வகித்தார். ஜனநாயக மக்கள் கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கண்டன கோஷங்களை தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனர் மாநிலத் தலைவர் நல்வினை செல்வன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி தொழில் வளர்ச்சி இல்லாத தொகுதி ஆகும் இங்கே வாழ்கிற பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாடம் கூலி வேலைக்காக நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கு பேருந்தில் பயணித்து காலை சென்று மாலை தங்களது வீடு திரும்புகின்ற சூழலில் மக்களின் வசதிக்கு ராசிபுரம் பேருந்து நிலையம் நன்கு பயன்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை ராசிபுரம் நகரத்தை விட்டு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் என்ற ஊருக்கு அருகில் இடம் மாற்றம் செய்தால் அப்பாவி ஏழை மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் எனவே ராசிபுரம் பொதுமக்களை வாழ வைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி ஜனநாயக மக்கள் கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம். மேலும் ராசிபுரம் நகரத்தில் பேருந்து நிலையத்தைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் வணிக வியாபாரிகள், ஜவுளி, நகை, மளிகை, ஹோட்டல், பேக்கரி போன்ற தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு உடனடியாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு ராசிபுரம் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை தடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் கழகத்தின் சார்பில் வலியுறுத்தினர். இறுதியாக ஜனநாயக மக்கள் கழகம் ராசிபுரம் நகர தலைவர் பி. தனபால் நன்றி உரை கூறினார்.
Next Story