முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.....

X
முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலைஊரணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(45). அதிமுக கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவரது வீட்டில் நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அலறியடித்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் வீட்டில் வெளியே வந்து பார்க்கும்போது தீப்பற்றி எரிந்துள்ளது. சிறிது நேரத்திலே அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தி உறவினரான செளந்தர் என்பவர் வீட்டிலும் இருமுறை பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் வீட்டில் வாசலில் பாட்டில்கள் உடைந்து கிடந்ததையடுத்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் முன்பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும் அதே ஊரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மது போதையில் முதியவர் ஒருவரை தாக்கியதாகவும் அதை தட்டிக்கேட்க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜெகதீசனுக்கு கைகலப்பு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அந்த சம்பவத்தின் முன் விரோதம் காரணமாக ஜெகதீசன் மதுரையை சேர்ந்த தனது 4 நண்பர்களை வரவளைத்து பெட்ரோல் குண்டு வீச செய்ததும் தெரிய வந்துள்ளது. ஜெகதீசனிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் மற்ற 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்ற்றனர். கிராமத்தில் நள்ளிரவு நேரம் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story

