பள்ளி முதல் நாளில் மாணவிகளுக்கு வரவேற்பு வழங்கிய ஆசிரியர்கள்

X
அரியலூர் ஜூன்.2- உடையார்பாளையம் அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளியில் (2024-2025)ஆம் கல்வியாண்டின் பள்ளிதொடக்கநாளில் பள்ளிக்குமாணவிகளை வரவேற்பு கொடுத்து அழைக்கப்பட்டது,நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமையில் உதவிதலைமையாசிரியர் இங்கர்சால் முன்னிலையில் புதியக்கல்வியாண்டின் முதல்நாளில் மாணவிகளுக்க பூ, சந்தனம், கற்கண்டு கொடுத்து மாணவிகளை உற்சாகமாக வரவேற்கப்பட்டது, மேலும் வழிப்பாட்டுக்கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி ஒற்றுமையை வளர்ப்போம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு உறுதிமெழி எடுக்கப்பட்டது, முதல்நாளில் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முன்னிலையில் மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி,மஞ்சுளா வனிதா, தமிழரசி,பாவைசங்கர் அருட்செல்வி, சங்கீதா, தமிழாசிரியர் இராமலிங்கம் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

