பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் : பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகளான பெரம்பலூர்தொகுதிக்குட்பட்ட நெடுவாசல் மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டி ஏப்ரல் மாதமும்,149கோடியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட குன்னம்தொகுதி கொட்டரை நீர்த்தேக்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி மே மாதமும் பெரம்பலூர் ஒன்றியம் லாடபுரம் கிராமத்தில் செயல்பாடன்றி உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரக்கோரி கடந்த ஏப்ரல் மாதமும் மனு அளிக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தையும்,தமிழ்நாடு அரசையும் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் கிழக்கு மாவட்டப் பொருளாளர் கீர்த்திவாசன் தலைமையில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர்.
Next Story





