பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம்!

வேலூரில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் கொணவட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட உபகரண பொருட்களை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

