காங்கேயம் பகுதியில் வாய்க்கால் கரையோரம் குற்றங்களைத் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா

காங்கேயம் பகுதியில் வாய்க்கால் கரையோரம் குற்றங்களைத் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா
X
காங்கேயம் பகுதியில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காங்கேயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நொய்யல் ஆறு, கீழ்பவானி மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டக் கால்வாய்கள்ஆகியனவற்றின் கரையோரப் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், அந்நிய நபர்களின் சந்தேக நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும் காங்கயம் போலீஸார் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இது தொடர்பாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு, போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
Next Story