மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி மற்ற மாணவர்களின் கைதட்டல்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2024- 2025 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு (செல்வராணி - தமிழ் , பாலச்சந்திரன் - ஆங்கிலம், சிலம்பரசி கணிதம், அருணா - அறிவியல், சின்னசாமி - சமூக அறிவியல், ) பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி பாராட்டினார். தொடர்ந்து உறுதி மொழி ஏற்றனர்.பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் , சீருடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story




