விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்
திருவள்ளூர் மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களின் சீருடைகள் சரிபார்த்து பின்னே ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக, கோடை விடுமுறை அளிக்கப்பட்டநிலையில் விடுமுறை நாட்களில், மாணவர்கள், விளையாடியும், உறவினர் வீடு மற்றும் சுற்றுலாத்தலங்களுக்குச் மாணவர்கள் உற்சாகமாக சென்றும் பொழுதை கழித்தனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, இன்று, மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது, அவ்வகையில், திருவள்ளூ் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு சந்தித்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டார், பின்னர் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆசிரியர்கள் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றனர். மேலும்அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் சீருடைகளை சரியாக உள்ளதா என்பதனை பார்த்த பின்பு மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர்.
Next Story






