கல்லாவி அருகே விஷம் குடித்து டிரைவர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் கல்லாவி அருகேயுள்ள செங்கழனீர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (44) தனியார் நிறுவன டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு செல்போன் மற்றும் டூவீலரை தொலைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் மனைவி கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரமேஷ் உயிரிழந்தார். இதுபற்றி கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

