தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

X
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவிய நகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியறை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவர்.
Next Story

