டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
X
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி காலத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக வழக்குகள் போடப்பட்டிருந்தன. டாஸ்மாக் ஊழல் என அமலாக்கத்துறை எந்த ஒரு ஆதாரமும் காட்டவில்லை. மத்திய அரசு அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் உணர்ச்சியோடு செய்திருக்கிறது என டாஸ்மாக் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் பேட்டி
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் ஏ ஐ டி யு சி டாஸ்மார்க் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 22 ஆண்டுகள் பணி புரியும் டாஸ்மார்க் பணியாளர்களை காலம் முறை ஓய் ஊதியம் வழங்க வேண்டும், இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தில் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட11 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் பெரியசாமி அளித்த பேட்டியில், டாஸ்மாக்கில் முறைகேடு இருப்பதாக எதிர் கட்சி தலைவர் பழனிச்சாமி கூறி இருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் தான் ஆளுகிற கட்சியில் இருந்த தரப்பில் தான் 2003 ஆம் ஆண்டு தான் சில்லரை விற்பனையை மொத்தமாக தமிழ்நாடு அரசை ஏற்றுக் கொண்டது. கடந்த 2021 வரை அவர் அமைச்சராக இருந்தார் முதலமைச்சராக இருந்தார் அப்பொழுதுதான் இது மாதிரி புகார்கள் எழுந்தது. புகார்களை விசாரிக்க தொழிற்சங்கம் எப்பொழுதும் தடையாக இருப்பதில்லை. எம் ஆர் பிக்கு அதிகமாக விற்பனை செய்வது குறித்து கேட்ட கேள்விக்கு, இப்பொழுது கூட 41 வழக்குகள் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பான்மைனது அவரது ஆட்சிக் காலத்தில் தான். டாஸ்மார்க் விற்பனையாளர்கள் எம் ஆர் பிக்கு விற்கும் நிலையில் தான் உள்ளனர் ஆனால் அந்த நிலையை உருவாக்க நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மற்ற பொது நிறுவனங்களில் செலவுகளை கழித்து மீத தொகையை நிர்வாகத்திற்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நிறுவனத்தில் அது மாதிரி ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அந்த செலவுகளை சரிகட்ட நிர்வாகம் சில நெளிவு சுளிவுகளை கடைபிடிக்கிறது அதனால் இந்த புகார்களுக்கு இடம் அளிக்கின்றன. இந்தப் புகார்களை களைய வேண்டும் என்பதுதான் தொழிற்சங்கங்களின் நிலை. இந்த நிலை எல்லா காலகட்டங்களிலும் இருந்திருக்கிறது. பழனிச்சாமி இருந்த காலத்தில் அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து தான் உள்ளது. அமலாக்கத்துறை ஊழல் விசாரணை குறித்து கேட்ட கேள்விக்கு, அரசின் லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக வழக்குகள் போடுவதை தவிர அமலாக்கத்துறை போட்ட எஃப் ஐ ஆர் எதுவும் கிடையாது. அதுவும் அதிமுக பழனிச்சாமி காலத்தில் போட்டதுதான். அது அரசியல். பணி நிரந்தரம் செய்து கேரளாவை போல் பணி பாதுகாப்பும், ஓய்வூதிய திட்டமும் இருக்குமானால். அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதை விடுத்து பத்து ரூபாய் பிரச்சனைகள் பேசிக் கொண்டிருப்பது சமூகத்தை ஏமாற்றுவது மக்களை ஏமாற்றுவது பணியாளர்களை ஏமாற்றுவது. எம் ஆர் பிக்கு அதிகமாக விற்பதை விசாரிக்க அமலாக்கத்துறை வரவில்லை. ஊழல் முறைகேடு நடந்ததாக வந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் அமலாக்கத்துறை காட்டவில்லை. முற்றிலும் மத்திய அரசு அரசியல் நோக்கத்தோடு பழி வாங்கும் உணர்ச்சியால் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் மது விற்பனை ஆகிறது என்பது குறித்து கேட்ட கேள்விக்கு, மது விற்பனை நேரம் அரசாணையில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அது தவிர மற்ற நேரங்களில் விற்பனை செய்தால் அனுமதி பெறாத மதுபானங்களில் விற்பனை செய்தால் அதை இரும்பு கரம் கொண்டு சட்டப்படி அடக்குவது அரசின் கடமை. அது நிர்வாக செய்யும் தவறு அல்ல. சட்ட விரோத கும்பல் சமூக விரோத கும்பல் செய்யும் தவறு என பேசினார். திண்டுக்கல் மதுரை தேனி கரூர் சென்னை திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story