தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  வாழ்த்து
X
வாழ்த்து
தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பயின்று குரூப்-1, குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற பலர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2024ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் கவிதா (துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்), குரூப்-4 தேர்வில் அப்துல் ரஹிம் (வனக்காப்பாளர்), ரகு (வனக்காவலர்) ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரில் வரவழைத்து கலெக்டர் பிரசாந்த் கேடயம் வழங்கி பாராட்டி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தார்.
Next Story