அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
X
பல்லடம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டது. பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி வரவேற்றனர். சித்தம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வரவேற்றார். தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதே போல பல்லடம் சேடபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜசேகரன் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். ராயர்பாளையம் நடுநிலைப் பள்ளியில் 6-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார். அம்மாபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இமைகள் ரோட்டரி சங்கம் சார்பில் இனிப்பு மற்றும் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட் டது.
Next Story