திருச்சியில் போலீஸ் நிலைய வளாகத்தில் பெண் போலீசாருக்காக ஓய்வு அறைகள்

திருச்சியில் போலீஸ் நிலைய வளாகத்தில் பெண் போலீசாருக்காக ஓய்வு அறைகள்
X
ஓய்வுஅறை இல்லாத போலீஸ் நிலையங்களை கணக்கெடுத்து அங்கு விரைவில் ஓய்வுஅறை கட்டப்பட இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள்
தமிழ்நாடு காவல்துறையில் | லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 35 ஆயிரம் பெண் போலீசார் பணியில் உள்ளனர். 1973-ம் ஆண்டு தமிழக காவல்துறை யில் பெண்கள் பணிக்கு சேர்க்கப்பட்டனர். பெண் போலீசார் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 2023-ம் ஆண்டு பெண் காவலர்கள் பொன்விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசார் மகிழ்ச்சி அடையும் வகையில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் முக்கியமானதாக அனைத்து போலீஸ் நிலையங் களிலும் பெண் போலீசாருக்காக கழிவறையுடன்கூடிய ஓய்வு அறை அமைக்கப்படும் என கூறி இருந்தார். அதன்அடிப்படையில் திருச்சி மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கான ஓய்வுஅறை கட்டப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரத்தில் 14 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், 6 குற்றப்பிரிவு போலீஸ் நிலையங் களும், 4 மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. மேலும், 2 போக் குவரத்து புலனாய்வு பிரிவு, விபசார தடுப்பு பிரிவு, மாநகர குற்றப்பி ரிவு, மதுவிலக்கு அமலாக்கபிரிவு என பல்வேறு பிரிவுகளும் இயங்கி வருகிறது. இந்த போலீஸ்நிலையங்களில் அதிக அளவில் பெண் போலீசார் பணி யாற்றி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் பெண் போலீசார் வி.ஐ.பி.க்களின் பாது காப்பு, திருவிழாக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக ளின் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப் படுகிறார்கள். இவர்கள் அந்த பணியை முடித்துவிட்டு மீண்டும் போலீஸ்நிலையம் திரும்பும்போது, சற்று ஓய்வு எடுப்பதற்கும், உடை களை மாற்றி கொள்வதற்கும் போதுமான இடவசதி இருப்பதில்லை. இந்தநிலையில் பெண் போலீசாருக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களிலேயே கழிவறையுடன் கூடிய ஓய்வுஅறைகள் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் தற்போது பாலக்கரை, காந்திமார்க்கெட் ஆகிய இரு போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கு ஓய்வு அறை கட்டப் பட்டு வருவதாகவும், இதுபோல் ஓய்வுஅறை இல்லாத போலீஸ் நிலையங்களை கணக்கெடுத்து அங்கு விரைவில் ஓய்வுஅறை கட்டப்பட இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
Next Story