திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி கடத்தலா?

X
சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான நிலை யத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த 35 வயது கொண்ட பயணி ஒருவர் சிங்கப்பூரில் ஒருவர் வழங்கிய பார்சலை சம்பந்தப்பட்டவர்களி டம் வழங்க எடுத்துசென்றார். அப்போது, அதனை தட்டி பறித்த ஒரு கும்பல் அந்த பயணியை காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தை தங்கம் கடத்தும் கும்பல் விரட்டிச் சென்றது. இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியாத நிலை இருந்து வருவதால் பயணிகள் பெரும் சிரமத்தை சந் திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story

