வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்!

வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்!
X
வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்!
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் இளங்கலை பாட பிரிவுக்கான மாணவிகள் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் பி.காம்., பி.காம். சி.எஸ்., பி.பி.ஏ., பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், 10, 11-ந் தேதி களில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை நடைபெறும் நாட்களில் உரிய ஆவணங்களோடு, குறித்த நேரத்தில் மாணவிகள் வரவேண்டும். கல்லூரியில் இருந்து தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் அழைக்கப்பட்ட மாணவிகள் கலந்தாய்வுக்கு பெற்றோருடன் பாடப்பிரிவு களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதிகளில் பங்கேற்க வேண்டும் என கல்லூரி முதல்வர் நசீம்ஜான் தெரிவித்தார்.
Next Story