ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக 'தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' அமைக்கப்பட்டு, நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பென்கள், முதிர்கன்னிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கான முகாம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், செல் போன் எண் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

