ஆற்காடு பஸ் நிலையத்தில் நகர மன்ற தலைவர் ஆய்வு!

X
ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்த நகராட்சி கடைகள் சேதமடைந்ததை தொடர்ந்து அந்த கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் அதிநவீன கட்டண கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிலைய நுழைவு வாயில் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கும்படியும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Next Story

