வாணியம்பாடியில் பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை

வாணியம்பாடியில் பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல் மருத்துவரால் 8 பேர் உயிரிழந்த விவகாரம் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையின்ர மருத்துவமனைக்கு பூட்டு...போட்டு நடவடிக்கை.சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் உரிய விளக்கம் திருப்தி பிராத நிலையில் மருத்துவமனைக்கு ஓட்டு போட்டதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பேட்டி..* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் (VTS) கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நடத்திய ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய கருவியே மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியது ஆய்வில் தகவல் வெளியானதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞான மீனாட்சி ஆய்வு செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த (VTS - கிளினிக்) என்ற பெயரை மாற்றி அறிவு மருத்துவமனை என்ற பெயரில் மற்றொரு மருத்துவமனை செயல்பட்டு வருவதால் பல் மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் தபால் மூலம் மருத்துவரிடம் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞான மீனாட்சி தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரம்யா அடங்கிய வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு பூட்டு போட்டு அதனுடைய சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி: நாங்கள் சம்பந்தப்பட்ட பல் மருத்துவர் அரிவரசனிடம் விளக்கம் கேட்டு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியிருந்தோம் அவர் பதிலளித்திருந்தார் அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அதனால் சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும். மேலும் இது குறித்து எங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவ அசோசியேஷன் அவர்களுக்கும் இது சம்பந்தமாக புகார் அளிக்க உள்ளதாக மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி கூறினார். பேட்டி: ஞான மீனாட்சி - (திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்)
Next Story