இந்து இறைத்தொண்டாளர்கள் சங்கத்தின் சார்பில்‘

X
சேலம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாப்பம்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் இந்து இறைத்தொண்டாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து இறைத்தொண்டாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பழனியப்பன், மாநில அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய முப்படை ராணுவ வீரர்களை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆலோசகர் பழனிவேல், மாவட்ட தலைவர் நாகேந்திரன், ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

