ஒகேனக்கல்லில் நான்கு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

ஒகேனக்கல்லில் கடந்த இரு மாதங்களில் மட்டும் நான்கு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு இங்கே தினசரி ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஜூன் ஒன்று வரை கோடை விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பணிகள் தினசரி வந்து சென்றனர் இந்த நிலையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கும் போது இந்த கோடை விடுமுறைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக தெரிவித்தனர் மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதலாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Next Story