புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

X
தருவைகுளம் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரையடுத்த தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையில் கொடியேற்றி மறையுரை வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 10 நாட்களும் மறையுரை, நற்கருனை ஆசிர்வாதம், திருப்பலிகள் நடைபெறும். வருகிற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5:45 மணியளவில் திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும். மாலை 6:30 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீர், தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை விவேக், வேதியர் மார்ட்டின் மற்றும் அருட் சகோதரிகள், ஆலய கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story

