முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் எம்எல்ஏ

X
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி பிரிவு பகுதியில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்த முதியவரை அவ்வழியாக சென்ற வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளருமான பரமசிவம் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்வை பார்த்த பொதுமக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் -க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Next Story

