வணிகர் சங்கத்தினர் வரிகளை குறைக்க மனு

X
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் வர்த்தக சங்கம், திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், திண்டுக்கல் நகர அனைத்து சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், துணைமேயர் ஆகியோரை நேரில் சந்தித்து சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வணிகர்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும், மற்ற மாநகராட்சிகளை விட அதிகமான சொத்து வரி செலுத்த வேண்டியுள்ளது என்று கூறி வரிகளை குறைக்க மனு அளித்தனர். வரி குறைக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக திண்டுக்கல் வணிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதாக தெரிவித்தனர்.
Next Story

