திருமருகல் அடுத்த வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்

திருமருகல் அடுத்த வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
X
வட்டாரக் கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை வழங்கி அறிவுரை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வவ்வாலடி அரசு பள்ளியில், புத்தகம் வழங்கும் விழா நடைப்பெற்றது. கோடை விடுமுறைக்கு பின் தமிழக அரசின் அறிவிப்பின்படி, நேற்று (2 -ம் தேதி) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதில், திருமருகல் ஒன்றியம் வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வட்டாரக் கல்வி அலுவலர் லீனஸ் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை வழங்கி அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷேக்தாவூது ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story