இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

X
திண்டுக்கல், பெரியகடைவீதி பிச்சை மைதீன் ராவுத்தர் சந்து பகுதியை சேர்ந்த அசாருதீன்(27) இவர் தனது வீட்டின் முன்பு பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார் அதனை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து அசாருதீன் மற்றும் நண்பர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் வீரமணி(27) என்பவரை பிடித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்து அவரிடமிருந்து பல்சர் பைக் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

