முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த தின நிகழ்வு
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மேற்கு நகரதிமுக செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,கிழக்கு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைச்செல்வன்மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சேரன் சக்திவேல், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன்,நகர இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல், நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், சினேகா ஹரிகரன், டி என் ரமேஷ், W.T.ராஜா,நகர மகளிர் அணி செயலாளர் கண்ணாம்பாள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ராஜவேல்ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டநகர ஒன்றிய திமுகவினர்கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து விசாகன் மருத்துவ மனையில் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை ஒட்டி பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர்கள் வட்டூர் தங்கவேல் தாமரை செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மருத்துவமுகாமில் நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மூட்டு வலி எலும்பு பிரச்சனை சர்க்கரை நோய் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்றனர்.விசாகன் மருத்துவமனை தலைமை மருத்துவர் ரித்திஷ் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலரும் முகாமில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
Next Story



