இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்
X
மதுரை உசிலம்பட்டியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கலைஞரின் பிறந்த தினத்தை கொண்டாடினார்கள்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேவர் சிலை முன்பு இன்று (ஜூன்.3) உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில், உசிலம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி மற்றும் இளைஞரணி, வழக்கறிஞர் அணி, மகளீரணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் இணைந்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை செம்மொழி தினமாக அனுசரித்து கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் தேவர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
Next Story