வாணியம்பாடியில் கலைஞரின் பிறந்தநாள் விழா கோலா கால கொண்டாட்டம்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கலைஞரின் பிறந்தநாள் விழா கோலா கால கொண்டாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். முன்னதாக பேருந்து நிலையம் அருகில் இருந்து மேளதாளத்துடன், மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டு, கட்சியினர் ஊர்வலமாக பேருந்து நிலையம் வரை சென்றனர். நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story

