ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு

X
ராமநாதபுரம் அருகே கொழுந்துறை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அபராதம் விதிப்பு- குடும்பத்தோடு ஊரை காலி செய்யும் அவலம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை கிராமத்தில் வசித்து வருபவர் மோகன்தாஸ் இவர் ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் அதில் கொழுந்துறை கிராமத்தில் குறிப்பிட்ட ஆறு பேர் கொண்ட நபர்கள் கிராமத்திற்கு கட்டுப்படாமல் இருந்தால் பொதுமக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வது காலில் கும்பிட்டு விளச்செய்தல் உற்றார் உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அடாவடித்தனம் செய்து வருகிறார்கள்- அதையும் மீறி கலந்து கொண்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதித்து சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு அடாவடித்தனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கண்ணீர் மல்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்- இது பற்றி பிரேம் ஜெயக்குமார் என்பவர் கூறுகையில் கொழுந்துறை கிராமத்தில் அதிகளவு தேவேந்திர குல வேளாளர் சமூக பொதுமக்கள் வசித்து வருகிறோம் இங்கு ஒரு சில நபர்கள் ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் பல்வேறு அரசு விதிமுறை மீறும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பது உறவினர்கள் இல்ல விழா மற்றும் இறப்புக்கு சென்றால் கடுமையாக தண்டிப்பது அவதாரம் விதிப்பது போன்ற பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி விசாரணை செய்ய வேண்டும் நடவடிக்கை எடுக்கா விட்டால் பல குடும்பங்கள் ஊரை காலி செய்ய நேரிடும் எனவும் தெரிவித்தார் இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் மனு கொடுத்தனர்
Next Story

