ராமநாதபுரம் முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது

ராமநாதபுரம் முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது
X
கமுதி அருகே தர்ம முனிஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி சுமந்து ஊர்மலமாகச் சென்று பெண்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி ஸ்ரீதர்மமுனீஸ்வரர் கோயில் வடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் மூலவர் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மே 28 ஆம் தேதி பக்தர்கள் சார்பில் நேத்தி கடன்களாக வழங்கப்பட்ட 1300 கிலோ அரிசி, 125 கிடாய்களை பலியிட்டு 2000 கிலோ கறி சமைத்து பக்தர்களுக்கு அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது. அன்று காலை பொதுமக்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகர் கோயிலிலிருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் வான வேடிக்கை , மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று, தர்ம முனீஸ்வரர் கோயிலை சுற்றி வந்து, முளைப்பாரியை கண்மாயில் கரைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் மூலவர் தர்ம முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.
Next Story