ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதக்கா பகுதியைச் சேர்ந்த பஞ்சு அருணாசலம் இவரது மனைவி முனியம்மாள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி இடம் மர்ம நபர் ஒருவர் காதில் அணிந்திருந்த நகையைக் கேட்டு கத்தியை கட்டி மிரட்டியுள்ளார் மூதாட்டி சத்தம் போட்டு கூச்சல் போட்டுள்ளார் உடனே கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி உள்ளார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூதாட்டியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதைக் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் இவரது மகன் காந்தி ராஜன் என்பது தெரிய வந்தது உடனே போலீசார் காந்தி ராஜனை பிடித்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

