கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கு - சிறுவன் உள்பட எட்டு பேர் கைது!

கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கு - சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரது மனைவி கஸ்தூரியை வெட்டி படுகொலை செய்தது. இதை தடுக்க வந்த அவரது சகோதரர் செண்பகராஜ்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் கோவில்பட்டி செண்பகா நகரை சேர்ந்த சதீஷ் மாதவன் (26) செல்லத்துரை (26)விக்னேஷ் (24) மதன்குமார் (20), கனகராஜ்( 24) அர்ஜுன்( 24)சுரேஷ்( 24) மற்றும் 17வயது சிறுவன் உள்பட 8பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story