வேலுச்சாமிபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
வேலுச்சாமிபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் அடுத்த வெங்கமேடு , விவிஜி நகர், காமராஜர் தெரு , இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாச்சம்மாள் வயது 78. இவர் மே 31 ஆம் தேதி காலை 6:15 மணி அளவில் , வேலுச்சாமிபுரம் பஸ்ட் கிராஸ் கிராம சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலை வழியாக வந்த ஈரோடு மாவட்டம் , ஊஞ்சலூர் , தெற்கு தெருவை சேர்ந்த செல்லமுத்து வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நின்று கொண்டிருந்த நாச்சம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாச்சம்மாளை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த நாச்சம்மாளின் மகன் கதிரேசன் வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்லமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story



