நாகமங்கலம் கிராமத்தில் எளிய மக்களின் குடிசை வீடுகளை ஈவு இரக்கமின்றி இடிப்பதை தடுத்து நிறுத்துக

நாகமங்கலம் கிராமத்தில் எளிய மக்களின் குடிசை வீடுகளை ஈவு இரக்கமின்றி இடிப்பதை தடுத்து நிறுத்துக
X
நாகமங்கலம் காமராஜர் நகர், காஞ்சிலி கொட்டாய் பகுதியில் 3 தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வசித்து வரும் எளிய மக்களின் குடிசை வீடுகளை ஈவு இரக்கமின்றி இடிப்பதை தடுத்து நிறுத்த கோரி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பகுதி மக்கள் சார்பில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அரியலூர், ஜூன் 3- அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் காமராஜர் நகர், காஞ்சிலி கொட்டாய் பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வரும் எளிய மக்களின் குடிசை வீடுகளை ஈவு இரக்கமின்றி இடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன், மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைசாமி, துரை.அருணன், மூத்த நிர்வாகி சிற்றம்பலம், மற்றும் நாகம்பந்தல்  கிராமம் காமராஜர் நகர், காஞ்சிலி கொட்டாய் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து 69 குடும்பங்கள் மூன்று தலைமுறைக்கு மேலாக (நீண்ட நெடிய காலமாக) வாழ்ந்து வசித்து வருவதாகவும் ,தங்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குச்சி வரி ரசீது ,மின் இணைப்பு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி நீர்நிலை புறம்போக்கு என்று வகைப்படுத்தி வீடுகளை இடிப்பதற்கு சம்பந்தப்பட்ட வருவாய் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும். அத்தோடு இடிப்பதற்கும் முயற்சி செய்தும் வருவதாகவும். மேற்கண்ட இடம் நீர்நிலை புறம்போக்கு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அந்த இடம் சம்பந்தமாக உரிய முறையில் ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டும். அதோடு தங்களுக்கு எந்த மாற்று முகாந்திரமும் இல்லாமல் ஏழை எளிய குடிசை வாழ் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான முறையில் மாற்று ஆலோசனை அல்லது மாற்று ஏற்பாடு என்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,இதுகுறித்து எங்கள் அமைப்பின் சார்பில் இன்று(03.06.25) அரியலூர் அண்ணா சிலை அருகில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கலந்து கொண்டு.தங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் முறையாக அந்த இடத்தினை ஆய்வு செய்து உடனடியாக இடிப்பதை தவிர்த்திடும் பொருட்டு தங்கள் சமூகம் போர்க்கால அடிப்படையில் தலையிடுமாறு கேட்டுக் கொள்வதாக ஊர் பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் நம் நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளத்திடம் சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் மனு அளித்தார. மேலும்  இதேபோல்  மாவட்டம் முழுவதும் குறிப்பாக ஜெயங்கொண்டம், சலுப்பை ஊராட்சி பட்டவர்த்தி, தண்டலை உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதையும் தடுத்து நிறுத்திட தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story