பிளாஸ்டிக் கழிவால் துார்ந்த கால்வாயை சீரமைக்க கோரிக்கை

X
காஞ்சிபுரம் மாநகராட்சி, சந்தியப்பன் நகர், சாத்தான்குட்டை தெருவில், மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காதததால், சந்தியப்பன் நகரில், பிளாஸ்டிக் கழிவு மற்றும் மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், இப்பகுதியினர் பலர், தங்களது வீட்டு கழிவுநீரை, குழாய் பதித்து இதில் விடுகின்றனர். எனவே, சாத்தான்குட்டை தெருவில் உள்ள வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

