உயிரிழந்த பீட்டர் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம்

X
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர் பீட்டர் ஜான்சன். இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் குழித்துறை ஆற்று தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் மனோ ( 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் ( 12) ஆகியஇருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்தனர். இதைக் கண்ட பீட்டர் ஜான்சன் இந்த நபர்களை காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளைஞர்களை காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள பீட்டர் ஜான்சன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story

