ஜெயமங்கலம் அருகே செயின் பறிப்பு

ஜெயமங்கலம் அருகே செயின் பறிப்பு
X
விசாரணை
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (65). இவரும், இவரது மனைவி காமுத்தாயும் (60) டூவீலரில் ஆண்டிபட்டியில் இருந்து குள்ளப்புரம் வழியாக பெரியகுளம் வந்து கொண்டிருந்தனர். அப்போது, இவர்களது டூவீலரை பின்தொடர்ந்த மர்மநபர் காமுத்தாய் கழுத்தில் அணிந்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 4 1/2 பவுன் தங்கச்செயினை பறித்து சென்றார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story