குளச்சல் : வாலிபர் தற்கொலை

X
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சலட்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுபித் (22). பிஎஸ்சி பயோடெக்னாலஜி படித்து விட்டு மனவளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சுபித் படிக்கும்போது உடன்படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுபித் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்து சுபித் கடந்த 30ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று 3-ம் தேதி காலை சுபித் உயிரிழந்தார். இது குறித்து சுபித் தாய் சுசிலா என்பவர் குளச்சல் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

