ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் மட்டத்தால் விவசாயிகள் கவலை ...*

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத பிளவக்கல்  பெரியாறு அணையின் நீர் மட்டத்தால்  விவசாயிகள் கவலை ...*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் மட்டத்தால் விவசாயிகள் கவலை ...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் மட்டத்தால் விவசாயிகள் கவலை ... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. 47.56 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 40 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது .குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. இருந்தபோதிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் போதுமான மழை பெய்யாததன் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனது.இதனால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரு அடி கூட உயரவில்லை.தற்போது அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது.பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராததின் காரணமாக விவசாயிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.
Next Story